ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் படைப்பும் காப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டவையாக மாறியிருக்கின்றன. அதில் இசை மற்றும் கலைப் படைப்புகளுக்கான காப்புரிமை என்பது இன்றுவரை தீரா சிக்கலாகவே இருக்கிறது, உலகம் முழுக்க நீதிமன்றங்கள் ஏரளமான வழக்குகளையும் சந்திக்கின்றன.

இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும, இளைஞானி இளையராஜா. இவர் சுமார் 1,000 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே இசை காப்புரிமை தொடர்பாக வழக்கு தொடுத்துள்ள நிலையில், தன்னை அடையாளப்படுத்தும் போட்டோ, பெயர், இசைஞானி என்ற பட்டப்பெயர், குரல் உள்ளிட்ட எதையும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட தன்னுடைய போட்டோக்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தன்னுடைய போட்டோவை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும், பிரபல நிறுவனங்களான, சோனி, ஸ்பாட்டிபை, உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மற்றும் யுடியுப் சேனல்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது
அந்த மனுவில், பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் போன்றவை தன்னுடைய போட்டோ, பெயர் மற்றும் குரலை வியாபார ரீதியாக பயன்படுத்தி வருகின்றனர் , அதன்மூலம் அவர்கள் பணம் சம்பாதித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியுப் போன்ற சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் போட்டோ, பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
இசைஞானி இளையராஜா, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் காப்புரிமை சார்ந்து போராடிவருகிறார். அவர் தனது திரையிசை பயணத்தைத் தொடங்கிய 1976இலிருந்து இந்த 48 வருடங்களில் காப்புரிமை, ஒப்பந்தம், அதன் நடைமுறை என நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தனது படைப்புகளை முன்வைத்து இங்கே நடந்த வணிகத்தில் பயனடையாதவராக இளையராஜா இருந்திருக்கிறார், கிட்டத்தட்ட அநேக கலைஞர்களுக்கும் இதுவே நிலை என்பதை புரிந்துகொண்ட இளையாராஜா நீதிமன்றத்தை நாடினார்.
காப்புரிமை சட்டம் 1957 என்பதை 2012க்கு முன் – பின் என இரண்டாகப் பிரிக்காலாம். இச்சட்டத்தில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. ஆக்கம், ஆசிரியர், அதன் உரிமையாளர். ஆக்கங்களுக்குக் காப்புரிமை உள்ளது எனச் சட்டம் சொல்கிறது. ஆனால், திரைப்படமும் ஒலிப்பதிவும் சற்று வேறுபட்டது அதன் காரணமாகவே இளைய ராஜா வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.