சென்னை: ஆளுநர்களுக்கு கால நிர்ணயம்.. காலக்கெடுவை நிர்ணயிக்கும் வரை ஓய்வெடுக்க மாட்டோம்   என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

மசோதாக்கள் மீது முடிவெடுக்க அரசியல் சாசனத்தின்படி, குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதே வேளையில் ஆளுநர்கள் காலம் தாழ்த்தினால், நீதிமன்றம் தலையிடும் என்றும் எச்சரித்துள்ளது.

முன்னதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறு நிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும் குடியரசு தலைவர் 3 மாதங்களிலும் முடிவெடுக்க வேண்டுமென காண கேள்வி பதில் தெரிந்தது. இது தொடர்பாக அரசமைப்புச் சட்டம் விளங்கி உள்ள அதிகாரங்கள் என்னென்ன என குடியரசுத் தலைவர் பதினாறு கேள்விகளை உச்சநீதிமன்றத்திடம் எழுப்பு இருந்தார். இந்த கேள்விகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

ஆளுநரின் காலதாமதம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட காலக்கெடுப்புக்குள் முடிவெடுக்காவிட்டால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படும் என இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னர் அளித்த தீர்ப்பை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி .ஆர்.கபாலி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சட்ட அமர்வு நிராகரித்து உள்ளது.

மசோதாக்கள் விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடுப்பது அரசமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு கூறி உள்ளது. அதே நேரம் காலம் வரையின்றி மசோதாக்களை நிறுத்தி வைப்பதற்கும் கிடப்பில் போடுவதற்கோ ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும், அவ்வாறு செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தெளிவுப்படுத்தி உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுதான் மாநிலத்தின் முதன்மையான அதிகார அமைப்பாக இருக்க முடியும் என கூறியுள்ள அரசமைப்புச் சட்ட அமர்வு ஆளுநர்கள் மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைமுறைகளை மேற்கொள்ள க்கூடாது எனவும் விளக்கி உள்ளது.

இந்த நிலையில், மாநில உரிமைகள் மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான எங்கள் போராட்டம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

ஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க அரசியலமைப்பை திருத்தும் வரை ஓய்வெடுக்க மாட்டோம். ஜனாதிபதி குறிப்புக்கு அளித்த பதிலில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து, ஏப்ரல் 8, 2025 அன்று தமிழ்நாடு அரசு எதிர் தமிழக ஆளுநர் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

உண்மையில், ஆலோசனைக் கருத்தை வழங்கும் அமர்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

  •  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஓட்டுநர் இருக்கையில் இருக்க வேண்டும், மேலும் மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகார மையங்கள் இருக்க முடியாது.
  • அரசியலமைப்புச் செயல்பாட்டாளர்கள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும் – அதற்கு மேல் ஒருபோதும் செயல்படக்கூடாது.
  • மசோதாவை அழிக்கவோ அல்லது பாக்கெட் வீட்டோவைப் பயன்படுத்தவோ ஆளுநருக்கு நான்காவது வழி இல்லை (தமிழ்நாடு ஆளுநர் செய்தது போல). மசோதாவை வெறுமனே நிறுத்தி வைக்க அவருக்கு வேறு வழியில்லை.
  •  ஆளுநர் மசோதாக்கள் மீது செயல்படுவதை காலவரையின்றி தாமதப்படுத்த முடியாது. ஒரு மசோதாவை பரிசீலிப்பதில் ஆளுநர் நீண்டகாலமாக, விளக்கப்படாத மற்றும் காலவரையற்ற தாமதம் செய்யும் வழக்குகளில், மாநிலங்கள் அரசியலமைப்பு நீதிமன்றங்களை அணுகலாம் மற்றும் ஆளுநர்களை அவர்களின் வேண்டுமென்றே செயல்படாததற்கு பொறுப்பேற்க வைக்கலாம்.
  • என்பனவற்றைத் தனது விளக்கத்தில் உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
  • மேலும், புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத் v. குஜராத் அரசு (1974) 1 SCC 717 வழக்கின் தீர்ப்பில் (பத்தி 109), 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, “நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பவை அரசு தலைமை வழக்கறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் போன்றவை என்பதைக் கடந்து அவற்றுக்கென எந்த மதிப்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.
  • *காலவரையின்றிக் காலம் தாழ்த்தலாம், *சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் மறுக்கலாம் எனும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் கூற்றை உச்சநீதிமன்றத்தின் நேற்றைய கருத்து மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது.
  • தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உட்பட மாநில அரசுகளுடன் மல்லுக்கட்டும் அனைத்து ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வழியில் செயல்பட வேண்டும் என்பதையும், மக்களின் விருப்பத்தைச் சட்டமியற்றி நிறைவேற்றும்போது, வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் காலத்தைக் கடத்தினால் நீதிமன்றங்களில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமென்பதையும் நமது சட்டப் போராட்டத்தின் மூலம் கட்டாயமாக்கியுள்ளோம்!
  • அரசியல்சட்டப்பிரிவு 361-க்குப் பின்னால் ஆளுநர்கள் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளோம். அரசியல் சட்டத்தால் அமையப்பெற்ற எந்தப் பதவியும் அச்சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை என நான் திடமாக நம்புகிறேன்.
  • உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை. ஆகவே, நீதிமன்றங்களின் கதவு தீர்வுபெறத் திறந்தே இருக்க வேண்டும். அது தனது கதவுகளை அடைத்தால், நமது அரசியலமைப்பின்படியான மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சியைச் சிறுமைப்படுத்திவிடும்;
  • அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கும்.
  • தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்!

எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம்!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.