சென்னை: தமிழ்நாட்டில் நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு நாய் கடி சம்பவங்கள் 5.25 லட்சமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை சுமார் 4.8 லட்சம்‘ பேர் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது. . நாய்கடி சம்பவங்கள் அதிகரித்தாலும், ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்பு 28-ஆகக் குறைந்துள்ளது (கடந்த ஆண்டு 43 பேர்) என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெருநாய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிரகரித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினாலும், தெருநாய் கடிக்கு ஆளாவோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் ஒரு தரப்பினர் தெருநாய்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் தெருநாய்கள் வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றன. இருந்தால், இவைகளால், பொது பாதுகாப்பு, மனித ஆரோக்கியம், சட்ட மற்றும் நெறிமுறை சவால்கள், மற்றும் சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் உருவாகின்றன.
நாய்களை முழுமையாக ஒழிப்பது சாத்தியமற்றது; அதற்குப் பதிலாக, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், மனிதர்களுடனான மோதல்களைக் குறைக்கவும், மனித ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் ஒரே ஆண்டில் 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தாண்டு மாநிலம் முழுவதும் நாய் கடி சம்பவங்கள் கவலைக்குரிய வகையில் அதிகரித்துள்ளன. இருப்பினும், நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் (வெறிநாய் கடி நோய்) உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடக் குறைந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
2025-ம் ஆண்டில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு (2024) முழுவதும் பதிவான 4.8 லட்சம் சம்பவங்களை விட மிக அதிகம் ஆகும். பாதிப்பு அதிகரித்திருந்தாலும், ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 43 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 28 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களில், ரேபிஸ் தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நாய் கடியால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் துறைரீதியான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன:
நாய் கடித்தாலோ, கீறினாலோ அல்லது சிறிய காயம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவச் சிகிச்சைப் பெற வேண்டும். இதற்கான நிலையான சிகிச்சையாக, 4 தவணை ரேபிஸ் தடுப்பூசி (ARV – Anti-Rabies Vaccine) போட்டுக்கொள்வது அவசியமாகும். ஆழமான காயங்கள் (Category-3) ஏற்பட்டிருந்தால், தடுப்பூசியுடன் சேர்த்து ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) மருந்தும் செலுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
தெரு நாய்கள் மட்டுமல்ல, வீட்டு வளர்ப்பு நாய்கள் கடித்தாலும் அது ஆபத்தானதே. தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருந்தால் அது உயிரிழப்பு வரை கொண்டு செல்லும். எனவே, நாய் கடித்தால் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாய் கடியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பொது சுகாதாரத் துறை இயக்குனர், நான்கு தவணை தடுப்பூசிகளையும் அட்டவணைப்படி போட்டுக்கொண்டால் மட்டுமே ரேபிஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீள முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.