சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் ) பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,  தமிழ்நாடு முழுவதும்  இன்றுமுதல் 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  947 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள்   இன்று (நவ.18) முதல் செயல்படும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.  இது  நவ.25ம் தேதி வரை செயல்படும் என்று கூறியுள்ளார்.

இந்தஉதவி மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் உதவி மையங்கள் (Electors Help Desk) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள்  கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் எனவும் சம்மந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.