சந்திரயான்-3, 2023 சூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
இந்த விண்கலம் 2023 ஆகஸ்ட் 5 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பின்னர் ஆகஸ்ட் 23ம் தேதி, விக்ரம் லேண்டர் உதவியுடன் பிரக்யான் உலவி சந்திரனில் தரையிறங்கியது.
இதன் மூலம் சந்திரனில் தரையிறங்கிய நான்காவது நாடு என்றும் நிலவின் தென்முனையில் தரையிறங்கிய முதலாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

இதில் பிரக்யான் உலவி செயலிழந்த நிலையில் இந்த விண்கலத்தின் உந்துவிசை தொகுதி (propulsion module – PM) பூமியின் அறிவியல் கண்காணிப்புகளுக்காக சந்திரனின் சுற்றுப்பாதையில் இருந்து 150 கி.மீ. உயரத்தில் நிறுத்தப்பட்டது.
தற்போது, சந்திரயான்-3 இன் உந்துவிசை தொகுதி (PM) சந்திரனைச் சுற்றியுள்ள ஈர்ப்பு விசை உகந்ததாக இருக்கும் சந்திரன் கோளத்தில் (MSI) நுழைந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் நேற்று தெரிவித்தனர்.
சந்திரனின் மேற்பரப்பில் இருந்து இந்திய டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்கின் (IDSN) தெரிவுநிலை வரம்பிற்கு வெளியே 3740 கிமீ தொலைவில் இந்த உந்துவிசை தொகுதி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 4ம் தேதி MSI இல் நுழைந்ததாகவும், சந்திரன் மீது பறந்ததை முதல் முறையாக நவம்பர் 6 ஆம் தேதி பார்த்ததாகவும் இரண்டாவது முறையாக நவம்பர் 11 ம் தேதி பார்த்த போது சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 4537 கிமீ தூரத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
சந்திரயான்-3ன் இந்த உந்துவிசை தொகுதி நவம்பர் 14 ஆம் தேதி சந்திரனின் ஈர்ப்புப் பாதையில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சந்திரனின் சுற்றுப்பாதையைச் சுற்றி தொடர்ந்து நடந்து வரும் பறப்பு நிகழ்வுகள் காரணமாக செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை மற்றும் சாய்வுகள் மாறிவிட்டதாக இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். பறப்பு நிகழ்வு பாதையை இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கட்டளை நெட்வொர்க் (ISTRAC) உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
சந்திரயான்-3 பயணத்தின் நோக்கம் சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிப்பதும், சந்திரனில் ரோவர் சுற்றுவதும், இடத்திலேயே சோதனைகளை மேற்கொள்வதும் ஆகும்.