பாட்னா:  பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  மதியம்  12மணி நிலவரப்படி,  பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் என்.டி.ஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமகா என்டிஏ கூட்டணி ஆட்சி தக்க வைக்கும் என  நம்பப்படுகிறது.

மகாகத்பந்தன் 46 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.  காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. இது ராகுல்காந்திக்கு பெரும் பின்னடைவாக கூறப்படுகிறது. 

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி  193 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது.

என்.டி.ஏ கூட்டணி தொடர்ந்து  முன்னிலை வகித்து வருவதால் தேஜஸ்வியின் ‘இளம் முதல்வர்’ கனவு பொய்த்துபோயுள்ளது.

முன்னதாக இன்று  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளை தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்பணியும் தொடங்கியுள்ளது. அதில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமாக, பாஜக-ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை காட்டிலும், என்டிஏ கூட்டணி அமோகமான முன்னிலையில் உள்ளது.

தேர்தல் ஆணைய இணையப்பக்கத்தில் வெளியான தகவல்:

பாரதிய ஜனதா கட்சி   87 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. 
ஜனதா தளம் (யுனைடெட்) – ஜேடி(யு)  75  தொகுதிகளில்  முன்னணியில் உள்ளது. 
ராஷ்ட்ரிய ஜனதா தளம் – RJD 0 36 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. 
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) – LJPRV 0 19  தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. 
இந்திய தேசிய காங்கிரஸ் – INC 0 6  தொகுதிகளில்  முன்னணியில் உள்ளது. 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (விடுதலை) – சிபிஐ(எம்எல்)(எல்) 0 6 தொகுதிகளில்  முன்னணியில் உள்ளது. 
இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) – எச்ஏஎம்எஸ் 0 4 தொகுதிகளில்  முன்னணியில் உள்ளது. 
ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா – ஆர்எஸ்ஹெச்டிஎல்கேஎம் 0 3  தொகுதிகளில்  முன்னணியில் உள்ளது. 
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் – ஏஐஎம்ஐஎம் 0 3  தொகுதிகளில்  முன்னணியில் உள்ளது. 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – சிபிஐ(எம்) 0 1  தொகுதியில் முன்னணியில் உள்ளது. 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – சிபிஐ 0 1 தொகுதியில் முன்னணியில் உள்ளது. 
பகுஜன் சமாஜ் கட்சி – பிஎஸ்பி 0 1  தொகுதியில் முன்னணியில் உள்ளது.