பாட்னா: பீகாரில் இன்று வாக்கு எண்ணிகை நடைபெற்று வரும் நிலையில், அங்கு மகாபந்தன் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா அல்லது என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா என நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளார்.
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்திற்கு பிறகு (SIR) பீகார மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்காக முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி, ஆட்சி மாற்றம் நிகழுமா? அல்லது எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் கிடைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல்:
‘243 தொகுதிகளை கொண்டு சட்டமன்றத்துக்க இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 65.08 சதவிகிதமாகவும், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு, 68.76 சதவிகித வும் வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 66.9 சதவிகித வாக்குகள் பதிவாகி, பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத புதிய உச்சம் பதிவு செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களை அமைத்துள்ளது. அவை 24 மணி நேரமும் செயல்படும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையத்துடன் பாதுகாக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும் 14,000 பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நடைபெற்ற வாக்குப்பதிவில், பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. கடந்த தேர்தலை காட்டிலும் 9 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருப்பதும், பெண்கள் அதிகளவில் வாக்களித்து இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பிந்தைய பெரும்பான்மையான கருத்து கணிப்புகள், நிதிஷ்குமார் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவே அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தன. தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது இடம் பிடிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகவும், இதற்கு பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வாக்குகளை பிரிப்பது முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், அண்மைக்காலங்களில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பொய்த்துபோவதால், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. கடந்த காலங்களில் ஒவ்வொருமுறை கூடுதலாக 5 சதவிகித வாக்குகள் பதிவானபோதும், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் ஆட்சியமைக்க போவது யார்? கருத்து கணிப்புகள் கூறுவது என்ன?