பீகார்: பீகாரில் மகாபந்தன் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஆர்ஜேடி தலைவர்  தேஜஸ்வி யாதவ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது என கடுமையாக சாடியுள்ளார்.

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (நவம்பர் 14) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாளை மதிய வேளையில், யார் வெற்றிபெறுவார்கள் என்பது ஓரளவுக்கு தெரிந்து விடும். இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் என்டிஏ (பாஜக-ஜெடியூ) கூட்டணி வெற்றி பெறும்  என கூறி வருகின்றன.

இதுகுறித்து  பாட்னாவில் செய்தியாளர்களிடம் ப பேசிய RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், தங்களது கூட்டணியே வெற்றி பெறும் என்று கூறி உள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் என்டிஏ (பாஜக-ஜெடியூ) கூட்டணி வெற்றி பெறும்  என்று வந்துள்ளதை கடுமையாக விமர்சித்த,  முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், இந்தக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவின் உத்தரவின்படி நடத்தப்பட்டவை என்று குற்றம் சாட்டினார்.

“இவை வெறும் உளவியல் அழுத்தங்கள், அதிகாரிகளின் அழுத்தத்தால் நடத்தப்படுபவை” என்றும்,  “மக்களிடம் இருந்து சேகரித்த கருத்துகள் எங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளன. 1995 தேர்தலை விட சிறந்தவை. இம்முறை நிச்சயம் மாற்றம் ஏற்படும். இந்தியா கூட்டணி அமோக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். அதிக வாக்காளர்கள் வாக்களித்தது மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் காட்டுவதாகவும் கூறினார்.

பாஜக தலைவர்கள் வாக்கு எண்ணிக்கையைத் தாமதப்படுத்த முயற்சிப்பார்கள் என்று குற்றம் சாட்டிய தேஜஸ்வி, “அதை எந்த நிலையிலும் அனுமதிக்க மாட்டோம். அவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்று உறுதி அளித்தார். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேஜஸ்வி யாதவின் இந்தக் குற்றச்சாட்டுகள் பீகார் தேர்தல் அரசியலை மேலும் சூடேற்றியுள்ளன.

என்டிஏ வெற்றி உறுதி என்று கணிப்புகள் கூறும் நிலையில், இந்தியா கூட்டணி மாற்றம் ஏற்படும் என்று உறுதியாக நம்புகிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகும், பீகார் தேர்தல் முடிவு தேசிய அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேஜஸ்வி யாதவின் நம்பிக்கை பேச்சு ஆர்ஜேடி தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருத்துக் கணிப்புகளை நிராகரித்து மக்கள் ஆதரவு தங்களுக்கு உள்ளது என்று இந்தியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது.

இவ்வாறு கூறினார்.