சென்னை: வங்கக்கடலில் உருவாகும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை காரைணமாசக இன்றுமுதல் 25ந்தேதி வரை சென்னை உள்பட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை‘ காரணமாக இன்று சென்னை உள்பட பல மாவட்டளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வருகிற 15-ந் தேதி முதல் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை குறைந்து, வெயில் கொளுத்திய நிலையில், மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. நவம்பர் 11ந்தேதி முதல் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னை உள்பட சுற்றுவட்டார பகுதிகள், அண்டைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
முதற்கட்டமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 17-11-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் 16-ந் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.
அதன்படி, வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக 16-ந் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும். 17, 18-ந் தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும் எனவும், 18, 19-ந் தேதிகளில் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து லட்சத்தீவு நோக்கி செல்கிறது. இருப்பினும் கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20-ந் தேதியும் தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் ஏற்படும்.
இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையை கொடுக்கும் என்றும், இதன் மூலம் 16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்து காணப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.