லக்னோ: டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் சதி திட்டத்துக்கு  உடந்தையாக  இருந்த பெண் டாக்டர் ஷாகீனா சாகித்  என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த  பயங்கரவாத திட்டம் தொடர்பாக குண்டு வைத்ததாக கூறப்படும் நபர் மருத்துவர்  என்ற நிலையில், மேலும் 12 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஷாஹீன் என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த  உத்தரபிரதேச பெண் மருத்துவர், இந்தியாவில் ஜெய்ஷ் அமைப்பின் மகளிர் பிரிவை அமைக்கும் பணிக்கு உட்படுத்தப்பட்டவர் என கூறப்படுகிறது.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலைய நுழைவு வாயில் 1 அருகே கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.  இச்சம்பவத்தில்  இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இதையடுத்து முக்கிய பகுதிகள் உஷார்படுததப்பட்டு உள்ளன. இத  பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.  இதனைத்தொடர்ந்ரு என்ஐஏ உள்பட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் களத்தில் இறங்கி விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருநந்து நாட்டு வெடிகுண்டுகள் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த கார் குண்டு வெடிப்புக்கு முன் சாலையில் அந்த காரை உமர் முகமது என்ற மருத்துவர் ஒருவர் ஓட்டிவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் என சொல்லப்படும் உமர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தாரா அல்லது தலைமறைவாகிவிட்டாரா என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.மேலும் காரை ஓட்டி வந்த நபர்,  ஹரியானாவில் வெடிபொருட்கள் வைத்திருந்ததாக கைதான மருத்துவரின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த குண்டு வெடிப்பில் அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்கொலைப் படைத் தாக்குதலாக என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த சதிட்டத்துக்கு உடந்தையாக இருந்ததாக   ஷாஹீனா சாகித்  என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் லக்னோவைச் சேர்ந்தவர். இவர்   பயங்கரவாத வலையமைப்பில்  சேர்ந்தது சதி திட்டத்தில், ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் கைது செய்யப்பட்டபோது அவரது காரில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிட்டதாகவும், அவருடன் சேர்த்து பல ஆண் மருத்துவர்களும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஷாகீன் இந்த பயங்கரவாத வலையமைப்பில் ஷாஹீன் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.