மும்பை: நடிகர் தர்மேந்திரா காலமானதாக செய்திகள் பரவிய நிலையில், தர்மேந்திரா உடல்நிலை என்ன? என்பது குறித்து அவரது மனைவி ஹேமமாலினி விளக்கம் அளித்துள்ளார். வதந்திகளை பரப்பாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தர்மேந்திரா நலமுடன் உள்ளார் – வதந்திகளை பரப்பாதீர்கள் என அவரது மனைவி ஹேமமாலினி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுபோல, தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான தர்மேந்திரா வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சுத் திணறல், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தின்ர் மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். Advertisement நடிகர் தர்மேந்திரா பிரபல இருதயநோய் நிபுணரான மருத்துவர் தேவ் பஹ்லாஞ்சனியின் கண்காணிப்பில் இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் தீவிரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் பரவி வந்தன. பின்னர் இன்று அதிகாலை முதல்வ6ர், நடிகர் தர்மேந்திரா காலமானதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது மனைவி ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்ன நடக்கிறது என்பது மன்னிக்க முடியாதது. பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளித்துவரும் நிலையில், பொறுப்புமிக்க செய்தி சேனல்கள் எவ்வாறு தவறான தகவல்கள் பரப்ப முடியும். இது மிகவும் பொறுப்பற்ற செயல். எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.