சென்னை: SIR என்ற சொல்லை கேட்டாலே தி.மு.க. அலறுகிறது, முதல்வர் ஸ்டாலின் பொய்யான தகவல்களை பரப்புகிறார் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான  எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார்.  மேலும் தமிழ்நாட்டிற்கு நிரந்தர டிஜிபி நியமனம் செய்வதில் என்ன பிரச்சினை என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.  முதல்வர் ஸ்டாலினே எஸ்ஐஆருக்கு எதிராக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்கிடையில் வாக்காளர் பட்டியல்  சரிபார்க்க செல்லும்  அரசு  ஊழியர்கள் மற்றும் பிஎல்ஓக்களுடன்  செல்லும் திமுக பிரமுகர்கள், தேவையற்ற விவகாரங்களில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  இதனால் அரசு ஊழியர்கள் பணி வாய்ப்பை ஏற்க மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, SIR என்ற சொல்லை கேட்டாலே தி.மு.க. அலறுகிறது  என்று கூறியதுடன்,  எஸ்.ஐ.ஆர். நடைமுறை மூலம் போலி வாக்காளர்களை நீக்குவதில் என்ன தவறு உள்ளது? என்று கேள்வி எழுப்பியதுடன், எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக அரசு தேவையற்ற அவதூறுகளை கூறி வருகிறது என்றும், வாக்குரிமை பறிபோய் விடும் என தி.மு.க.வினர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் என்று கூறியதுடன்,  21 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தமிழ்நாட்டில்  SIR நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

தகுதியான வாக்காளர்கள் இடம் பெற வேண்டும் என்பதற்காக எஸ்.ஐ.ஆர். நடைமுறை. *இதற்கு முன்பு 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று இருக்கிறது என்று கூறியதுடன், இதற்காக படிவங்களை  8 நாட்களில்  விநியோகித்து விடலாம், இதில் என்ன சிக்கல்?  போலி வாக்காளர்களை நீக்குவதில் என்ன தவறு உள்ளது?  என கேள்வி எழுப்பியதுடன்,  தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் BLO-க்கள் இருக்கிசறார்களே என்றார்.

போலி வாக்காளர்களை வைத்து வெற்றி பெறலாம் என தி.மு.க. நினைக்கிறது என்ற எடப்பாடி,  SIR குறித்து தவறான தகவல்களை தி.மு.க.வினர் பரப்பி வருகின்றனர்.  தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க.வினர் முயற்சிக்கின்றனர் என்று கூறியதுடன், படிவங்கள் கொடுக்க செல்லும் முகவர்களிடம்,  வேறு கட்சிகளின் வாக்காளர்கள் என்றால் படிவத்தை தி.மு.க.வினர் கிழித்து விடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து கிடக்கிறது. போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. திண்டிவனத்தில் மாணவியை காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய காவலர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து கிடக்கிறது.  காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு அச்சமில்லை என்பது தெரிய வருகிறது.  போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன.  தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்றவர், தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என எண்ணும் அளவிற்கு நி மை மோசமடைந்துள்ளது. ஆனால்6, போக்சோ வழக்குகளில் ரூ.104 கோடி நிவாரணம் அளித்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும்கூட தமிழ்நாட்டில்  நிரந்தர டிஜிபியை நியமனம் செய்ய முடியாத நிலையில் திமுக அரசு  உள்ளது,யு.பி.எஸ்.சி 3 பேரை பரிந்துரைத்தும் அதில் இருந்து ஒருவரை டி.ஜி.பி.யாக தி.மு.க அரசு நியமிக்கவில்லை , தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. காலதாமதம் செய்கிறது என குற்றம்சாட்டினார்.

 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு,  கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு பேசுவது  இயல்பு  என தெரிவித்தார்.