சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், எடப்பாடிக்கு பங்கு உண்டு என அவர் மீது அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். மேலும், விஜய் தலைமையில் சரியான கூட்டணி அமைந்தால் அது திமுகவுக்கு கடுமையான போட்டியாக இருக்கும்” என்று கூறினார்.

அதிமுகவில் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் இணைந்து தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். கொடநாடு விவகாரத்தில் இபிஎஸ் ஏ1 குற்றவாளி என கடுமையாக சாடியிருந்ததார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார் என்று கூறியவர், முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் இருந்தன என்று கூறியவர், கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சூழ்நிலையை யோசித்து பாருங்கள் என்று தெரிவித்தார்.
கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது யார் ஆட்சி நடந்து கொண்டிருந்தது? என கேள்வி எழுப்பியவர், கொலை, கொள்ளை நடந்த சமயத்தில் நான் டெல்லியில் விசாரணையில் இருந்தேன் என்று கூறிய டிடிவி, ஆனால், எடப்பாடி பழனிசாமி கொடநாடு பங்களாவுக்கு போய் கோப்புகளை தேடி கொண்டிருந்தார். அவர் கொடநாடு பங்களாவில் எந்த ஃபைலை தேடினார் என்பது தெரய வில்லை என்றவர், ஆனால், முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்தன என்ற டிடிவி தினகரன், அந்த கோப்புகளை நான் தான் கிழித்தெறிந்தேன் என்றும் தெரிவித்தார்.
நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைத்தால் அவருடைய வேட்பாளர்கள் 2021 தேர்தலில் தோற்றுப் போவார்கள் என்று அப்போது சொன்னேன். இந்த தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி, இந்த காலகட்டத்தில் விஜய் அரசியலில் பிரவேசித்துள்ள நிலையில், தி.மு.க கூட்டணிக்கும் த.வெ.க கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும். அவருடன் கூட்டணி செல்வதைப் பற்றியெல்லாம் நான் முடிவு செய்யவில்லை.
“அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதை விடப் பொதுச்செயலாளர் பதவியை விட்டுவிடக் கூடாது என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். விஜயின் அரசியல் வருகையால், அடுத்த தேர்தலில் அ.தி.மு.க 3வது இடத்திற்குத் தள்ளப்படும்” என்றும் கூறினார்.
நான் எதார்த்தமாக ஒரு குடிமகனாக பார்த்து நீங்கள் கேள்வி கேட்பதால் பதில் சொல்கிறேன்.
விஜய் தலைமையில் சரியான கூட்டணி அமைந்தால் அது கடுமையான போட்டியாக இருக்கும்” என்று கூற்னார்.