பாட்னா: பீகாரில் வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஹரியானாவில், ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 வாக்குகள் உள்ளது என்பதையும்,அங்கு 5லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் உள்ளதாகவும் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
கார் மாநிலத்தில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்கு திருட்டு மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பாஜக முயல்வதாக ராகுல், ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானாவில் வழக்கத்துக்கு மாறாக தபால் ஓட்டுகள் அனைத்துமே வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளுக்கு எதிராக இருந்தன. அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஏற்கனவே பீகாரில், எஸ்ஐஆர் மூலம் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெறும் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி உள்ளது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பாஜகவின் புதிய ஆயுதம் என்று விமர்சித்துள்ள ராகுல், ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு உள்ளது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டார்.
ஹரியானா மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடி பேர், திருடப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 25 லட்சம்; ஹரியானாவில் மொத்தம் உள்ள வாக்குகளில் 12.5 சதவீதம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. 8ல் ஒரு வாக்கு ஹரியானா சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டு. 2க்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது, அதை ஏன் பயன்படுத்தவில்லை? என கேள்வி எழுப்பி உள்ள ராகுல்காந்தி, தேவையான மென்பொருள் இருந்தும் தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்க வில்லை என குற்றம் சாட்டினார்.
பல கருத்துகணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறியிருந்தன. ஆனால் முடிவு வேறாக இருந்தது. மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும். வரலாற்றில் முதல்முறையாக தபால் வாக்குகளுக்கும், EVM வாக்குகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. வாக்கு மோசடி முடிவுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆட்சியையே எப்படி திருடியுள்ளார்கள் என்பதை புள்ளி விவரங்கள் மூலம் அம்பலப்படுத்தப் போகிறேன்.
ஆபரேஷன் ஆட்சி திருட்டு என்ற பெயரில் பாஜக, காங்கிரஸின் பிரமாண்ட வெற்றியை தோல்வியாக மாற்றியது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று அனைத்து தரப்பும் கூறியபோது பாஜவைச் சேர்ந்த நயாப் சைனி மட்டும் வஞ்சக சிரிப்பு சிரித்தார். எங்களிடம் ஒரு டிரிக் இருக்கிறது என்று நயாப் சைனி கூறினார். ஹரியானா பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி பேட்டியை மேற்கோள்காட்டி பாஜக சதியை அம்பலப்படுத்தினார்.
ஹரியானாவில் வெறும் 22,000 வாக்குகளில் தான் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஹரியானாவில் ராய் சட்டமன்ற தொகுதியில் 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை ஒரே நபர் ஓட்டளித்துள்ளார்.

ஹரியானாவில் 22 முறை வாக்களித்த வாக்காளரின் புகைப்படம் பிரேசிலைச் சேர்ந்த மாடல் ஒருவருடையது. ஹரியானாவில் மொத்த வாக்காளர்கள் 2 கோடி பேர், திருடப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 25 லட்சம். ஹரியானாவில் மொத்தம் உள்ள வாக்குகளில் 12.5 சதவீதம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. 8ல் ஒரு வாக்கு ஹரியானா சட்டமன்ற தேர்தலில் திருடப்பட்டது. ஹரியானாவில் ஒரே ஒரு புகைப்படத்துடன் ஒரு சட்டமன்ற தொகுதியில் 100 வாக்குகள் இடம்பெற்றுள்ளது.
ஹரியானாவில் பெண் புகைப்படத்துடன் கூடிய ஆண் வாக்காளர் வாக்குப் பதிவு செய்தது அம்பலம். மாதவ்புரா, அலந்த் தொகுதிகளில் நடந்தது தனிப்பட்ட சில தொகுதிகளில் நடந்த மோசடி அல்ல என்பது அப்போதே தெரிந்தது. தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த மோசடியை கண்டுபிடித்துள்ளோம். ம.பி., சத்தீஸ்கர், மராட்டியத்தில் அதே மோசடி நடந்தது தெரிய வந்தது என்றார்.

இவ்வாறு கூறினார்.