சென்னை: ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு நான் தந்தையா?  டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் மாதம்பட்டி ரங்கராஜ் அறிவித்துள்ளார். ஜாய் கிறிசில்டா என்னை மிரட்டியே திருமணம் செய்துகொண்டார் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், சின்னத்திரையுலகில் புகுந்ததும், அவரது புகழ் மங்கத் தொடங்கியது. திரையுலகில் தன்னை மேலும் அழகனாக காட்டிக்கொள்ளும் வகையில்  ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிஸில்டாவை பணி அமர்த்தினார். அதுவே, அவருக்கு இன்று தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.. கிரிஸில்டாவின் கவர்ச்சி  மீதான மோகத்தில், கட்டிய மனைவியை விட்டு, கிரிஸில்டாவை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தினார். இது சமுக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது.

இந்த நிலையில், மயக்கம் தெளிந்த மாதம்பட்டி, தனது முதல் மனைவியை சந்திக்க தொடங்கியதும், பிரச்சினை தொடங்கியது. இதனால் வெகுண்டெழுந்த ஜாய் கிரிஸில்டா,  மாதம்பட்டியுடன் தான் எடுத்த திருமண புகைப்படத்தை வெளியிட்டதுடன், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இதற்கு மாதம்பட்டிதான் காரணம் என அதிரடியாக அறிவித்துடன், தற்போது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். அந்த ஆண்  குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு  பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில்,  ங்கராஜ் தனக்கு மாதா மாதம் 6.50 லட்சம் ரூபாய் பராமரிப்புச் செலவுக்காகக் கொடுக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்து, அடுத்தக்கட்ட அழுத்தத்தைக் கொடுத்தார். இவர்களது வழக்கு குடும்ப நல நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், கிரிஸில்டாவுக்கு பிறந்த ஆண் குழந்தை தன்னுடையதுதான் என்பதையும் ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாகவும் தகவல்கள் பரவின.  தனது விஷயத்தில் மகளிர் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா   தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொடர் மிரட்டல் விடுத்து வந்ததால், அவரது   மிரட்டலின்பேரில் அவரை  2வது திருமணம் செய்ததாக விளக்கம் அளித்தார்.

இந்த விஷயம் தொடர்பாக தான் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்று மறுத்துள்ள மாதம்பரட்டி, மகளிர் ஆணைய விசாரணையின்போது ஜாய் கிறிசில்டா மாதம் ரூ.1.5 லட்சம் பராமரிப்பு தொகை வேண்டும் என்று கேட்டார். தனது பிஎம்டபிள்யூ காருக்கு ரூ.1.25 லட்சம் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்றும் ஜாய் கிறிசில்டா கேட்டிருந்தார். ஜாய் கிறிசில்டாவின் கோரிக்கையை விசாரணையின்போது நான் ஏற்கவில்லை. டிஎன்ஏ பரிசோதனையை நான் ஒருபோதும் மறுக்கவில்லை  . மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்றும் குறிப்பிட்டார்.

 கிரிஸில்டாவுக்கு பிறந்த ஆண் குழந்தை தன்னுடையது அல்ல என்று மறுத்ததுடன், இதை  டி.என்.ஏ. சோதனைக்கு  தயாராக இருப்பதாகவும், டிஎன்ஏ சோதனையில் அந்த குழந்தை   என்னுடையது என்று நிரூபித்தால் கவனித்துக் கொள்வேன் என்றும் தெரிவித்தார்.