பாட்னா:  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது பீகார் மாநிலத்தில்  நாளை  முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று மாலையுடன் அங்கு நடைபெற்ற அனல்பறக்கும் பிரசாரம் ஒய்வு பெற்றது.

243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி  நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில்  சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அங்கு ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது.  அதுபோல ஆட்சியை கைப்பற்ற ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி யான மகாபந்தன் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது.  இதற்கிடையில்,  பிரபல தேர்தல் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் கட்சியும் களத்தில் உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி  காணப்படுகிறது.  தேர்தல் களத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்பட தேசிய கட்சிகளின்  தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 18 மாவட்டங்களை சேர்ந்த    121 தொகுதிகளில் நேற்று (நவம்பர் 4ந்தேதி) மாலை  5 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது.  நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில்,  7 கோடியே 42 லட்சம்  வாக்காளர்களை கொண்ட பீகாரில் 3 கோடியே 92 லட்சம் ஆண்கள் வாக்காளர்களும், 3 கோடியே 50 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர். வாக்கு ப்பதிவுக்காக சுமார்  90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்ட தேர்தலுக்காக கடந்த மாதம் 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 17-ந் தேதி நிறைவடந்தது. 18-ந் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. மனுக்கள் வாபஸ் பெற 20-ந் தேதி கடைசி நாளாக இருந்தது.

இதையடுத்து  வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று தொடங்கி உள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.