திருவனந்தபுரம்: பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்க பூஜைகளுக்கான கோவில் திறக்கப்படும் நாளை குறித்த விவரங்களை   திருவிதாங்கூர்  தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலத்திற்கான ஆன்லைன் முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது ஜனவரி 11 தேதியிலிருந்து 20 வரையிலான முன்பதிவு  இதுவரை திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

புகழ்பெற்ற சபரிமலை மண்டல விளக்கு பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி  சபரிமலை வந்து அய்யப்பனை தரிசித்து செல்வார்கள்.  அதையொட்டி, கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளதுடன், இந்த ஆண்டுமுதல், பக்தர்களுக்கான இன்சூரன்ஸ் வசதியும் ஏற்படுத்தி உள்ளது.

மண்டல பூஜை என்பது கார்த்திகை மாதத்தில் தொடங்கும் ஒரு நீண்ட திருவிழாவாகும்,  இந்த  காலம் மொத்தம்  41 நாட்கள் நீடிக்கும். இந்த பூஜைகள் கார்த்திகையில் தொடங்டிகி  டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் நிறைவடையும், அதைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் மகர விளக்கு பூஜை நடைபெறும்.

மண்ட பூஜையானது  இந்த ஆண்டு (2025), இது நவம்பர் 16 அன்று திறக்கப்படும். தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறும். அதனால் கோவில் நடை திறந்திருக்கம். மண்டல பூஜையின் நிறைவு டிசம்பர் 27 அன்று நடைபெறும், அதன் பிறகு நடை அடைக்கப்படும். 

பின்னர்  மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி நடைபெறும் அதைத்தொடர்ந்து ஜனவரி 20ல் நடை சாத்தப்படும்  என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இதையடுத்து,    மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்பட்டு 17ம் தேதி நடை அடைக்கப்படும்.

பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு 19ம் தேதி நடை சாத்தப்படும்.

மண்டல பூஜைக்கான அனலைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி சுமார் 1 லட்சம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.