சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்ககை விடுத்துள்ளார்.
வட தமிழ்நாட்டில் உள்ள KTCC (சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள்), பாண்டி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், மயில்தவுத்துறை, விழுப்புரம் ஆகிய இடங்களில் இன்று மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை தொடரும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும், மேலும் புதுச்சேரி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். வடதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் மாதத்தின் முதல் 3 நாள்களில் மிகவும் அதிக வெப்பம் பதிவானது. தமிழகத்தில் நவம்பர் மாதம் இயல்புக்கும் குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வரும் நாள்களில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடையும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னைக்கு 150 ஆண்டுகளுக்கும் மேலான நவம்பர் மாதங்களில் 3 வெப்பமான நவம்பர் நாட்கள் இந்த நவம்பரில் இருந்ததாக நீங்கள் நம்புவீர்களா? மதுரை விமான நிலையத்தைப் பொறுத்தவரை, நவம்பர் மாதத்தின் முதல் 5 வெப்பமான நவம்பர் நாட்களில் நான்கு இந்த நவம்பரில் வந்துள்ளன. வெப்பநிலைக்கான வரலாற்று நவம்பர். ஈரோட்டைப் பொறுத்தவரை, எல்லா காலத்திலும் முதல் 4 வெப்பமான நவம்பர் நாட்கள் இந்த நவம்பரில் வந்துள்ளன. கிரேசி ரெக்கார்ட்ஸ்.
தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தை விட மழை குறைவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க, MJO பசிபிக் பெருங்கடலில் நீந்தி மகிழ்ந்ததால், இந்தியப் பெருங்கடலில் அதன் பிரமாண்டமான நுழைவுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.
இதற்கிடையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, திங்கள்கிழமை காலை அதே பகுதியில் நிலவியது. இது செவ்வாய்க்கிழமை (நவ. 4) நண்பகல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர்-பங்களாதேஷ் கடற்கரையையொட்டி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை (நவ. 4) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.