தருமபுரி: பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? திமுக எம்பி மணியின் திருமண விழாவில் பேசிய முதல்வர் பிரதமர் மோடிக்கு  சவால் விடுத்தார். மேலும,  2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமைவது நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பீகார் ஊழியர்கள் தாக்கப்படுவதாக சொன்ன கருத்தை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து பேச முடியுமா என திமுக எம்பி மணியின் இல்ல திருமண விழாவில் மணமக்கள் வாழ்த்தியபேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்க சவால் விடுத்துள்ளார். பாஜக எப்படிப்பட்ட சதி செயலை செய்தாலும் தமிழகத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி மணியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் இருந்து தருமபுரிக்கு காரில் சென்றார். தம்பதியருக்கு தமது கரங்களால் தாலியை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் தீய செயலை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனை தடுப்பதற்கான முயற்சியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முழுமையாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் உண்யைான வாக்காளர்களை நீக்கும் தந்திரமாகும். இதனை தான் பீகார் மாநிலத்தில் மேற்கொண்டனர். பீகார் மாநிலத்தில் இது மேற்கொள்ளப்பட்ட போது தமிழகத்தில் இருந்து தான் முதல் நபராக குரல் எழுப்பப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக வழகு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கு தகுந்த விளக்கத்தை அளிக்கவில்லை.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் முழுமையாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரமாகும். இதை தான் பிகார் மாநிலத்தில் மேற்கொண்டனர். பீகார் மாநிலத்தில் இது மேற்கொண்டபோது தமிழகத்திலிருந்து தான் முதல் எதிர்ப்பு எழுந்தது.

இதுகுறித்து வழக்கு தொடுத்த நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கு தகுந்த விளக்கத்தை அளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை தடுத்து நிறுத்ததான் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த பிரச்னையில் இரட்டை வேடத்தை மேற்கொள்கிறார்.‌ தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க பயப்படுகிறார். பாஜக எப்படிப்பட்ட சதி செயலை செய்தாலும் தமிழகத்தில் அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.

பிரதமர் அவர்கள் பிகாரில் வாக்கு அரசியலுக்காக நாடகத்தை நடத்தி இருக்கிறார். 2026 தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சி நிச்சயம் அமையும் என்றார். பிகார் மக்கள், தமிழகத்தில் வந்து பணிபுரியும், தொழில் செய்யும் வாழும் பிகார் மக்கள் தமிழகம் குறித்தும், அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் குறித்து நல்ல விதத்தில் பேசியிருக்கிறார்கள். ஆனால், வாக்கு அரசியலுக்காக நாடகத்தை நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி.

பீகாரில் பேசிய கருத்துகளை, தமிழ்நாட்டில் வந்து பேசுவாரா பிரதமர் மோடி? யார் என்ன சதி செய்தாலும் அவதூறுகளை பரப்பினாலும் 2026ல் திமுக தலைமை வகிக்கும் ஆட்சி நிச்சயம் அமையும் என்பதை சொல்லிக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.தமிழகத்தில் பணியாற்றும் பிற மாநில தொழிலாளர்கள், தமிழகம் தங்களுக்கு வாய்ப்பளித்தள்ளதாக தெரிவிக்கின்றனர். நம் மீது எத்தனை அவதூறுகள் பரப்பினாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமைவது நிச்சயம் .

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், எ.வ. வேலு, சிவசங்கர், ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இவ்வாறு கூறினார்.