சென்னை: தெருநாய் தொடர்பான வழக்கில் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலாளர் உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், உச்சநீதிமன்றம்,  பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் நாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக  கூறி உள்ளது.

தெரு நாய் தொல்லை விவகாரத்தை சு உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணக்க அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் டெல்லி மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தன.  தமிழ்நாடு உள்பட 25 மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத நிலையில், அம்மாநில தலைமைச்செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

அதன்படி, இன்று வழக்கு உச்சநீதிமன்ற  நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போலத  தமிழக தலைமைச் செயலர் ஆஜரானார்.  அதுபோல மற்ற மாநில தலைமைச்செயலாளர்களும் ஆ4ரானார்கள். அவர்களிடம் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், இதுபோன்று இனிமேல் நடந்துகொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து  விசாரணை நடைபெற்றது. வழக்கின் விசாரணையின்போது,  இடைத்தரகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கருணா நுண்டி, தெருநாய் விவகாரத்தில்  எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு அவற்றை  அதுதொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்  என்று கோரினார். இருப்பினும்,  அதைஏற்க பெஞ்ச் மறுத்துவிட்டது.

அப்போது,  டெல்லி உள்ளாட்சி அமைப்புகளால்  நாய்களுககு உணவளிக்கும் பகுதிகளை நியமிப்பதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் நண்டி சமர்ப்பித்தார். அதுதொடர்பாக தனியாக விசாரிக்கப்படும் என்று கூறி நீதிபதிகள்,

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் குராவ் அகர்வால் அமிகஸ் கியூரியாகத் தொடர்வார் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.   .

தெருநாய்கள் விவகாரத்தில், அரசு கட்டிடங்களின் வளாகங்களில் நாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்கப்போவதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவு ஓரிரு நாட்களில் பதிவேற்றப்படும் என்று கூறியது.

“அந்தப் பகுதியில் நாய்களை ஆதரித்து ஊக்குவிக்கும் ஊழியர்கள் உள்ள அரசு நிறுவனங்கள் குறித்து சில நாட்களில் நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம்” என்று நீதிபதி விக்ரம் நாத் குறிப்பிட்டார்.