சேலம்: அதிமுகவை பலவீனப்படுத்தவோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டோலோ பொறுத்துக்கொள்ள மாட்டோம்  என செங்கோட்டையனுக்கு  பதிலடி கொடுத்த எடப்பாடி, அவரை ‘மீண்டும் அமைச்சராக்கியது நான்தான் என கூறினார்.

அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்ட செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ள நிலையில்,  அதிமுகவை பலவீனப்படுத்தவோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டோலோ, அதை நாங்கங்ள பொறுத்துக்கொள்ள மாட்டோம் என கூறினார்.

சேலத்தில் இன்று  செய்தியாளர்களை சந்தித் எடப்பாடி பழனிச்சாமி,   செங்கோட்டையன் பேச்சு மூலம் அவரது வன்மம் வெளிப்பட்டு விட்டது.  அவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் செயலாற்றி வந்தார். அதிமுகவை பலவீனப்படுத்த யார் முற்பட்டாலும்  சரி,   அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?” என்றுகேள்வி எழுப்பினார்.

கோவையில், அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்ததற்காக கட்சி சார்பற்ற முறையில் எனக்கு நடத்தப்பட்ட  பாராட்டு விழாவில், நான் பங்கேற்றேன். இந்தப் பாராட்டு விழாவில் பங்கேற்கும்படி நான் அழைத்தபோது, செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. கோபி சட்டமன்றத் தொகுதியில் 30% ஏரிகளை நிரப்பும் திட்டம் இது என்றபோதிலும், அவர் புறக்கணித்தார்.

ஆனால், அந்த நிகழ்ச்சியில்,  செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்ததுடன்,  அந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை. அதனால்தான் பங்கேற்கவில்லை என்று கூறினார். ஆனால், கட்சி விழா அல்ல என்று விளக்கினார்.  இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதை விளக்கியபோது அவர் ஏற்க வில்லை என்றார்.

ஆனால், செங்கோட்டையன்,   தமிழக அரசின் இலவச சைக்கிள் கொடுக்கும் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றார். அந்த விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள்தான் இருந்தன.  சைக்கிள் கொடுக்கும் விழாவில் எங்கே ஜெயலலிதா படம்? என்று  அவர் கேள்வி எழுப்பியிருக்கலாமே? என கேள்வி எழுப்பினார்.

 அதிமுகவிலிருந்து பிரிந்துசென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறுகிறார். ஆனால், செங்கோட்டையன் சொல்பவர்கள் எல்லாம் பிரிந்து சென்றவர்கள் இல்லை. கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.

 ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு உண்மையாக இல்லை. கட்சி அலுவலகத்தின் பூட்டையே உடைத்து ஆவனங்களை எடுத்துச்சென்றார். அதுபோல,  டிடிவி தினகரனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார்.  அதனால், அவர்கள்  எல்லாம் அதிமுக பற்றி கருத்துக் கூற கூடாது என்று கறாராக  தெரிவித்தவர்,

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து  பிரிந்து சென்றவர்களை  சந்திக்கவில்லை. அவர் சந்தித்தவர்கள் எல்லாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்று சுட்டிக்காட்டியதுடன்,  ஏற்கனவே இணைந்து பணியாற்றலாம் என்றபோது, ஓபிஎஸ்க்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போதும் அவர் கட்சிக்கு உண்மையாக இல்லை. ஓபிஎஸ் அவரது மகன் இருவரும் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து பேசுகிறார்கள் என்றார்.

ஜெயலலிதா இருக்கும்போது செங்கோட்டையனின் அமைச்சர் பதவி மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்திய எடப்பாடி,  அவரை அமைச்சராக்கியது நான். நான் பொறுப்பேற்றபோதுதான், செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கினேன் என்றவர், தற்போது செங்கோட்டையன்,  திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் . அதிமுக தலைமைக்கு விரோதமாகச் செயல்பட்டால் தலைமைக் கழகம் வேடிக்கை பார்க்குமா?

சட்டப்பேரவையில் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசியதில்லை. தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்த ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள். அ.தி.மு.க தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

அ.தி.மு.க-வைப் பற்றி பேச டி.டி.வி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்பவர்கள்தான் ஓ.பி.எஸ், செங்கோட்டையன் போன்றோர்” என்று கூறினார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்திருக்கிறார் செங்கோட்டையன். சட்டவிதிகளின்படியே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவதுதான் இவர்கள் திட்டம் .

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.