சென்னை: நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் என சூளுரைத்துள்ளார்.

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மூதறிஞர்  ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றுவதற்காகப் போராடியனார்.   ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர் இவர்தான்.   1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தலைநகராக சென்னை இருக்கவும்,  , திருப்பதியைத் தமிழ்நாட்டோடு இணைக்கவும் இவர் போராடியர் மமோசி.  ஆனால், இ திருத்தணி தமிழகத்துடன் இணைந்தது.  இவரது போராட்டங்களின் பின்னணியில்தான், பேரறிஞர் அண்ணா 1968-ல் சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆனால்,

மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, முதன்முதலாக தமிழ்நாடு என்ற பெயர் வைக்க போராடிய நாளான நவம்பர் 1ந்தேதிதான் தமிழ்நாடு நாள் என்று தமிழறிஞர்கள் கூறி வருகின்றன. ஆனால், திராவிட ஆட்சியாளர்கள் சட்டப்பேரவையில் தமிழ்நாடு என தீர்மானம் நிறைவேற்றிய நாளை தமிழ்நாடு என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.

மபொசி  இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார் தமிழக அரசு இவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடுகிறது. 2006-ல் இவரது நூற்றாண்டு விழாவின்போது, இவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

இநத் நிலையில்,  தமிழ்நாடு நாளை முன்னிட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டிற்கு இன்று 69-ம் பிறந்தநாள். 69 ஆண்டு களுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாளான இதே நாளில் தான் மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதி தான் உண்மையான தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதில் நாம் இழந்த நிலப்பரப்பை விட, அதன் பிறகு நாம் இழந்த உரிமைகள் அதிகம். சகோதர மாநிலங்கள் என்று நாம் உறவு கொண்டாடினாலும் கூட அவற்றிடம் நாம் ஆற்று நீர் உரிமைகளை இழந்திருக்கிறோம். தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களின் துரோகங்களால் கச்சத்தீவு உள்ளிட்ட உரிமைகளை இழந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படிப்பதையும், தமிழ் மொழியை படிப்பதையும் கட்டாயமாக்குவதற்கு கூட திறனற்ற அளவுக்கு நமது ஆட்சியாளர்கள் உரிமைகளை தாரை வார்த்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் போதிலும், அந்த உரிமை எங்களுக்கு தேவையில்லை என எட்டி உதைக்கும் ஆட்சியாளர்கள் தான் நமக்கு வாய்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் திறன் படைத்த தமிழ் அரசை அமைப்பதற்காக கடுமையாக உழைக்க இந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.