மும்பை: மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ,இதன் காரணமாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

 இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பெண்கள் அணி  கோப்பையை கைப்பற்றுமா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் நடைபெற்ற வரும்,  ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 339 ரன்கள் என்ற  இலக்கை  இந்திய அணி அநாயசமாக அடித்து நொறுக்கி வெற்றி பெற்றதன் மூலம், இந்திய மகளிர் அணி சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது

நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை தொடரின் பரபரப்பான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

இந்திய அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 127 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 89 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.  இந்த போட்டியில் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டநாயகி விருதையும் வென்றார். ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்த போட்டியில் பல சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 339 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக அடைந்ததன் மூலம், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேஸிங் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.  முன்னதாக ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றின் போது இந்தியாவுக்கு எதிராக 331 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்சமயம் இந்தியா முறியடித்துள்ளது. மேலும், ஒருநாள் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில்(ஆடவர்-மகளிர்) ஒரு அணி 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைச் சேஸிங் செய்தது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த பரபரப்பான சூழலில்,  முன்னாள் சாம்பியனான தென்னாப்பிரிக்கா மற்றும்    இந்திய அணி  இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன‘.  வரும் நவம்பர் 2ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற உள்ளது. அது யார்? என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

நவி மும்பையில் உள்ள டி.ஆர். ஒய்.பாட்டில் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

மகளிர் ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்குகள்

339 – இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர், நவி மும்பை, 2025 WC

331 – ஆஸ்திரேலிய மகளிர் vs இந்திய மகளிர், விசாகப்பட்டினம், 2025 WC

302 – இலங்கை மகளிர் vs தென்னாப்பிரிக்க மகளிர், போட்செஃப்ஸ்ட்ரூம், 2004

ஒருநாள்  போட்டியில் அதிக ரன்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளும் இணைந்து மொத்தமாக 679 ரன்களைக் குவித்தன. இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்களைக் குவித்த போட்டியாகவும் இது மாறியுள்ளது. இதற்கு முன்பு 2017 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 678 ரன்கள் குவிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

உலகக் கோப்பைப் போட்டியில் சதம் அடித்த இளம் வீராங்கனை

உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் சதம் அடித்த இளம் வீராங்கனை என்ற வரலாற்றை ஆஸ்திரேலியாவின் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் படைத்துள்ளார். 22 வயதான அவர் இப்போட்டியில் 93 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 119 ரன்களைச் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம், அந்த அணியின் தொடர் வெற்றிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 15 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கும் நிலையில், தங்களுடைய முதல் தோல்வியை நேற்று சந்தித்துள்ளது.