ஸ்ரீஹரிகோட்டா: LVM3-M5 ராக்கெட்  வருகிற 2-ஆம் தேதி மாலை 05:26 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பர் 2-ல் விண்ணில் செலுத்தப்பட  உள்ளதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்த நிலையில், விண்ணில் ஏவப்படும் நேரம் பின்னர் அறிவிப்பதாக கூறியிருந்தத. இந்த நிலையில், நவம்பர் 2ந் தேதி  மாலை 05:26 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்தியாவின் செயல்பாட்டு கனரக-தூக்கும் ஏவுகணையான #LVM3M5 உயரம்: 43.5 மீ | லிஃப்ட் ஆஃப் நிறை: 642 டன் | நிலைகள்: 2×S200 திட, L110 திரவ, C25 கிரையோஜெனிக் என அதன் விவரங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,400 கிலோ கிலோ எடை கொண்டது. CMS-03 (GSAT-7R  ) என்பது மல்டி-பேண்ட் தொடர்பு செயற்கைக்கோள் இந்த ராக்கெட்டின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து,  அக்டோபர் 26 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டது.  இதைத்தொடர்ந்து, ராக்கெட்டை ஏவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த செயற்கை கோளானது   இந்திய கண்டம் மற்றும் விரிவான கடல் பகுதிகளுக்கு உயர் வேக தரவு தொடர்பு, வாய்ஸ், வீடியோ சேவைகளை வழங்கும் என்றும்,   இதுவரை புவி வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் சிஎம்எஸ்-03 அதிக எடை கொண்டதாகும். இந்த செயற்கைக் கோளில் விரிவுப்படுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் உள்ளன.

இந்த செயற்கைகோள்  இந்திய தேசிய கடற்படைக்கானது இது கடல் பாதுகாப்பு, கண்காணிப்பு, துணை வழிகாட்டுதல் போன்றவற்றை வலுப்படுத்தும்.   “இது இந்தியாவின் விண்வெளி தொடர்பு திறனை உலக அளவில் உயர்த்தும்” என இஸ்ரோ தலைவர்  கூறியுள்ளார்.

நவம்பர் 2 அன்று மாலை 5:26 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து LVM3-M5 ராக்கெட்டை விண்ணில் ஏவ உள்ளது. இந்த ராக்கெட், ‘பாகுபலி’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஏவுகணைத் தொடரின் ஐந்தாவது மிஷன் ஆகும்.  ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு, செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 26 அன்று ராக்கெட் ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டது.

இறுதிகட்டமான ‘கவுண்ட்டவுன்’ (ஏவுதலுக்கு முந்தைய எண்ணிக்கை) நவம்பர் 1 அன்று தொடங்க வாய்ப்புள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏவுதல், இஸ்ரோவின் தொழில்நுட்பத் திறனை மீண்டும் உறுதிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகும்.இந்தச் செயற்கைக்கோள், ராணுவத்தின் பாதுகாப்பு தொடர்பான தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தும். LVM3 ராக்கெட், அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவி சுற்றுவட்டப் பாதைக்கு (GEO) செலுத்தும் திறன் கொண்டது. இதுவரை நடத்தப்பட்ட ஏவுதல்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்துள்ளன. இந்த மிஷன், இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தில் மற்றொரு மைல்கல்லாக அமையும்.

முடிவாக, இஸ்ரோவின் இந்த ஏவுதல், ராணுவ தகவல் தொடர்பு துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்யும். நவம்பர் 2 அன்று நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, உலக அளவில் கவனத்தை ஈர்க்கும். இஸ்ரோவின் தொடர்ச்சியான வெற்றிகள், இந்தியாவின் விண்வெளி ஆய்வில் பெருமை சேர்க்கின்றன.

https://patrikai.com/lvm3-m5-cms-03-mission-indias-lvm3-launch-vehicle-is-scheduled-to-launch-the-cms-03-communication-satellite-on-november-02-2025/