சென்னை: வடகிழக்கு பருவமழையால் 33%க்கு மேல் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும், அவை இன்னும் ஒரு வாரத்தில் முடியும், அதன்பிறகு இழப்பீடு குறித்து முதல்வர் அறிவிப்பார் என வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, வடமாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் வேளாண் நிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஒருவாரத்திற்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், சேதம் அடைந்த பயிர்களை கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளது குறித்தும், காப்பிடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் பயிர் சேதங்களை கண்காணிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கிய பயிர்களில், 33%க்கு மேல் சேதம் அடைந்தால், இழப்பீடு மற்றும்வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, “மழை காரணமாக சேதம் அடைந்த பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒரு வாரத்தில் நிறைவடையும். இழப்பீடு தொடர்பாக முதல்வர் அறிவிப்பார்” என்று தெரிவித்தனர்.
