மதுரை: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யபப்ட்டுள்ளது. இன்றும், நாளையும் காலை 6-இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை. மதுரையின் பல்வேறு முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள தேவர் சிலைக்கு அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். மேலும், தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், தேவர் நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். முதல்வர் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு, பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.
இதையொட்டி அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், மதுரை, கழுதி, ராமநாதபுரம் மற்றும் பசும் பொன் பகுதிகளில், போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 300 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், பதற்றமான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் கூடுதலாக போலீசார் போடப்பட்டு, சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் 10,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி அந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. . அதன்படி, மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் காலை 6-இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையின் பல்வேறு முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.