கர்நூல்: ஆந்திராவில்  இன்று அதிகாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில்  15 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த  சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த  அதிர்ச்சி சம்பவத்துக்கு குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே  இன்று அதிகலை 3.15மணி அளவில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஆம்னி பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்றது போல் நல்ல தூக்கத்தில் இருந்ததால், பலரை காப்பாற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சோக சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணையில்,  ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனம் பேருந்துக்கு அடியே சென்று சிக்கிக்கொண்டதால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்ட போது பலரும் அவசர கால கதவு வழியே குதித்து தப்பியுள்ளனர். இதில் காயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து தீயை உடனடியாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், கர்னூல் பேருந்து சோகம்: கர்னூல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஏ சிரி கூறுகையில், “அதிகாலை 3 மணி முதல் 3:10 மணி வரை பேருந்து ஒரு பைக் மீது மோதியதில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. 41 பயணிகளில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களில்

இதனிடையே, பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பேரழிவு தரும் பேருந்து தீவிபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குடியரசு தலைவர் முர்மு,  துணை குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன்,  பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Photo- Video Credit: ANI