சென்னை: தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்டு நெரிசலில் சிக்கி 41பேர் உயரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, நீதிமன்றத்தில் முதல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

செப்டம்பர் 27ந்தேதி அன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்பரையின்போது ஏற்பட்ட கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியானதுடன் 110 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுது. இதையடுத்து, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குழுவினர் அக்டோபர் 15ந் தேதி கரூர் வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணையை தொடங்கினர். அப்போது உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு ஐஜி அஸ்ராகர்க் தலைமையிலான சிறப்பு குழுவினர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் ஆவணங்கள் மற்றும் விசாரணை நிலை அறிக்கையை ஒப்படைத்தனர்.
இதைபெற்றுக்கொண்டு ஆய்வு செய்த சிபிஐ குழுவினர், அக்டோபர் 16 முதல் விசாரணையை முடுக்கி விட்டனர். சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமி புரத்தை காரில் சென்று பார்வையிட்டனர் சம்பவம் நடந்த வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மரத்தின் மீது ஏறியதில் மரக்கிளை முறிந்து விழுந்தது. இது தொடர்பாக வனத்துறையின் ஆவணங்களை பெற்று வனத்துறையினரிடம் சிபிஐ குழுவினர் விசாரணை நடத்தினர். .
பின்னர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறைக்காக கடந்த 19ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் குழுவினர் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவரகள் 22ந்தேதி மீண்டும் கரூர் திருப்பிய நிலையில், விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் படுகாயம் அடைந்தவர்கள் காவல்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை மேற்பார்வை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தற்போது எல்லை பாதுகாப்பு படை ஐஜியாக பணிபுரியும் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண் தில்லி ரிசர்வ் போலீஸ் படை ஐஜியாக பணிபுரியும் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி சோனல் மிஸ்ரா என்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் இன்று அல்லது நாளை கரூர் வந்து சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உள்ளனர்.
இந்த நிலையில் எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் கடந்த கடந்த எட்டு நாள்களாக விசாரணை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நீதிபதி பரத் குமார் முன் அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையடுத்து தவெக கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது.