சென்னை: அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரும் 29ந்தேதி தென்காசி பயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து வரும் 30ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவிலும் கலந்துக் கொள்கிறார்.
முதல்வர் ஸ்டாலின், வரும் அக்டோபர் 29ஆம் தேதி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தென்காசி பயணம் மேற்கொள்ள உள்ளார். அதனை தொடர்ந்து, அடுத்த நாள் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவிலும் கலந்துக் கொள்ள பசும்பொன் பயமாகிறார்.

முதல்வர் ஸ்டாலின்தென்காசியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக அக்டோபர் 24, 25 ஆகிய தேதிகளில் தென்காசி செல்ல இருந்தார். ஆனால் அன்றைய தினம் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்தது.
இதனை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக முதல்வரின் தென்காசி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் தெரிவித்திருந்தார். மேலும் அவர் வேறு தேதிகளில் பயணம் மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்j நிலையில் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தென்காசிக்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
முதல்வரின் பயணம் அக்டோபர் 29ஆம் தேதி சென்னையில் இருந்து தொடங்குகிறது. சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, காலை 10:30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் சாலை மார்க்கமாக தென்காசிக்கு செல்கிறார். அதனை தொடர்ந்து, தேவர் ஜெயந்தி விழாவிலும் கலந்துக் கொள்ள உள்ளார்.