சென்னை: கோவில் நிதியில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டக்கூடாது! இந்து அறநிலையத் துறைக்கு மீண்டும்  உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே திருவண்ணா மலை கோவில் வளாகத்தில் வணிக வளாகம் கட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது மீண்டும் உத்தரவிட்டு உள்ளது.

கந்தக்கோட்டம் கோவில் நிலத்தில் வணிக வளாகம், குடியிருப்புகள் கட்ட தடை விதிக்கக் கோரி வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி. பழனி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு  உத்தரவிட்டு உள்ளது.

கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கட்டும் பணிகளை தொடரலாம் என கூறியதுடன்,  கட்டுமானங்களை அறநிலையத் துறைச் சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

. மேலும் இந்த வழக்கில் நவம்பர் 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, கோவில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

https://patrikai.com/commercial-complex-should-not-be-built-with-temple-surplus-funds-supreme-court-dismissed-tn-hrce-appeal-petition/