சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் எனக் கருதப்பட்ட நிலையில் நிலப்பரப்புக்கு அருகே வரும்போது அது வலுவிழந்து விட்டது. இதன் காரணமாக வானிலை அமைப்புகள் மாறிவிட்ட காரணத்தால் சென்னை உள்பட பெரும்பாலான இடங்களில்  நேற்று பிற்பகல் முதல் மழை குறைந்து விட்டது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில்  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தற்போது அந்த பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக,  திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளத.

இதற்கிடையில்,  சென்னை வானிலை ஆய்வ மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,  இன்று  தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி,   திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கோவை,, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (24ந்தேதி)  தமிழகத்தில் 6 மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுதினம்  (25ந்தேதி) கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 26-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 27, 28-ந்தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அன்றைய தினம் சென்னை., திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.