டெல்லி: இந்திய ராணுவத்தில் கூடுதல் பலத்தை சேர்க்க ‘பைரவ் பட்டாலியன்’ எனப்படும் இயந்தி நாய்களைக்கொண்ட  புதிய பட்டாலியன்கள் சேர்க்கப்படும் என்று ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார், டைரக்டர் ஜெனரல் (காலாட்படை)  தெரிவித்து உள்ளார்.

இந்திய ராணுவம் இந்த மாத இறுதிக்குள் புதிதாக உயர்த்தப்பட்ட ‘பைரவ்’ கமாண்டோ பட்டாலியன்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளன. மேலும்,   ஆறு மாதங்களில் 25 பைரவ் லைட் காம்பாட் பட்டாலியன்களை செயல்படுத்த உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும்  இயந்திர நாய்களைக்கொண்ட  பைரவ் பட்டாலியன்,  சீனா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் வடக்குப் பகுதியில் மூன்று, வடகிழக்கில் ஒன்று, மேற்குப் பகுதியில் ஒன்று என ஐந்து பிரிவுகள் முக்கியமான எல்லைகளில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார், இந்திய முப்படைகளை நவீனப்படுத்தும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது. அதன்படி முப்படைகளின் அனைத்து பிரிவுகளும் படிப்படியாக நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராணுவத்தின் காலாட்படை பிரிவில் பல்வேறு நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தவர், ராணுவத்தில் இயந்திர நாய்களைக் கொண்ட பைரவ் பட்டாலியன் படை உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பணியமர்த்தப்பட்டு உள்ள காலாட்படை பிரிவுகளின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 380 காலாட்படை பிரிவுகளில் தற்போது டிரோன் படைப்பிரிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் ஒவ்வொன்றிலும் 4 கண்காணிப்பு டிரோன்களும், 6 ஆயுதங்களுடன் கூடிய டிரோன்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் இந்த படைப்பிரிவுக்காக ரூ.2,770 கோடியில் 4.25 லட்சம் நவீன துப்பாக்கிகள் வாங்கப்பட்டு உள்ளன. இவை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கிடைத்து விடும்.

அதுபோல,  த  சிறப்பு பைரவ் லைட் காம்பாட் பட்டாலியன்களை ஆறு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், அது,  இந்திய ராணுவத்தின் உருமாற்ற முயற்சியின் மற்றொரு மைல்கல்லைத் தொடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில்,  ஐந்து பைரவ் பட்டாலியன்கள்  முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளன. மேலும் நான்கு தற்போது உருவாக்கப்பட உள்ளன, மீதமுள்ள 16 அடுத்த ஆறு மாதங்களுக்குள் செயல்படும் என்றார்.

இந்த பைரவ்  பட்டாலியன்  “மெலிந்ததாகவும், ஆபத்தானதாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், இது , சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் எல்லைகளில் விரைவான, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளன,” என்று கூறினார்.

காலாட்படை என்பது 400 க்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்ட இராணுவத்தின் மிகப்பெரிய சண்டைப் பிரிவாகும். ஒரு வழக்கமான காலாட்படை பிரிவுக்கும் சிறப்புப் படைகளுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப இதுபோன்ற சிறப்புப் பட்டாலியன்களின் தேவை உணரப்பட்டது. எல்லை தாண்டிய நடவடிக்கைகள், உளவு பார்த்தல் மற்றும் இடையூறு பணிகளை மேற்கொள்ளும் பணியில் உள்ள பைரவ் பிரிவுகள், பாரா-சிறப்புப் படைகளை மூலோபாய பணிகளுக்கு விடுவிக்கும்.

ஏற்கனவே தெரிவித்தபடி, எதிரிக்கு சேதம் விளைவிக்கும் சிறப்புப் பணிகள் மற்றும் பணிகளில் பைரவ் பட்டாலியன்கள் நிறுத்தப்படும். இருப்பினும், இந்த பிரிவுகள் சிறப்புப் படைப் பிரிவுகளைப் போல அதிக ஆயுதம் ஏந்தியதாகவோ அல்லது மூலோபாய நடவடிக்கைகளில் ஈடுபடவோ இருக்காது என கூறப்படுகிறது.