சென்னை: கடந்த   ஜூலை மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இணையதளத்திற்கு சென்று தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில், 3,935 இடங்களை நிரப்ப நடத்தப்பட்ட குரூப் 4  தேர்வில்,  காலி இடங்கள் அதிகரிக்கப்பட்டு, 4,662 ஆக அறிவிக்கப்பட்டது. இந்த இடங்கள் இன்னும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 12ம் தேதி  குரூப் 4 தேர்வு நடைபெற்றது.  தேர்வுக்கு மொத்தம் 13,89,738 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 11,48,019 பேர் தேர்வை எழுதினர். மீதமுள்ள 2,41,719 தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதவில்லை. இதனால் தேர்வை எழுதியவர்கள் விகிதம் 82.61 சதவீதமாக இருந்தது.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.  நேற்று (அக்டோபர் 22 மாலை)  வெளியிட்டுள்ளது.    தேர்வர்கள் https://apply.tnpscexams.in/result-groupIV/A5k3pfLQfrCvGl3shUzfbvYWyto7qiY2 என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

தேர்வர்கள்  டிஎன்பிஎஸ்சி இணைதயதளத்திற்கு சென்று, தங்களின் பதிவெண், பிறந்த தேதி ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். அனைத்தையும் உள்ளீடு செய்து, சப்மிட் பொத்தானை அழுத்தவும். உடனே தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும். தேர்வு முடிவுகளை  பதிவிறக்கம் செய்து, சேமித்துக் கொள்ளவும்.