திருவனந்தபுரம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலையில் உள்ள கழிவுகள் தொடர்பாக, அந்த பகுதி மக்கள் தொழிற்சாலைக்கு தீ வைத்தனர். இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு பிரிவான டைபி பிரிவு தலைவர் உள்பட300 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். அவர்கள்மீது கொலை முயற்சி குற்றச்சாட்டுகள்  பதியப்பட்டு உள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள தாமரசேரி பகுதியில் அமைந்துள்ள  கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு எதிராக  அந்த பகுதி  பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலை காரணமாக அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.  மேலும் கோழி கழிவுகளால் அந்த பகுதியே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த தொழிற்சாலையை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.  அவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில்,  போராட்டக்காரர்கள் திடீரென்று தொழிற்சாலைக்குள் புகுந்து தீ வைத்தனர். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துணையினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள்,  தொழிற்சாலைக்கு தீ அணைக்க வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியது. அதேபோல் பாதுகாப்புக்கு நின்று இருந்த காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மக்கள் தொழிற்சாலைக்கு தீ வைத்ததாகவும் அதை தடுக்க முட்பட்ட காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும். இதை தொடர்ந்து தடியடி சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, இந்த தொழிற்சாலைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் DYFI தலைவர் உள்பட   300க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.