திருநங்கைகளுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக நகைச்சுவை எழுத்தாளரைக் கைது செய்ததற்காக லண்டன் காவல்துறையினர் மீது விமர்சனங்கள் எழுந்தது.
இதையடுத்து “குற்றம் அல்லாத வெறுப்பு சம்பவங்களை” விசாரிப்பதை நிறுத்துவதாக லண்டன் போலீசார் நேற்று தெரிவித்துள்ளனர்.
“ஃபாதர் டெட்” மற்றும் “ஐடி க்ரவுட்” புத்தகங்களின் எழுத்தாளர் கிரஹாம் லைன்ஹான், செப்டம்பர் மாதம் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட கருத்துகளுக்காக கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து குற்றத்தை தூண்டாத வெறுப்பு சம்பவங்களைப் பதிவு செய்வதையும் விசாரிப்பதையும் நிறுத்துமாறு சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பினர்.
இந்நிலையில், புண்படுத்தும் சமூக ஊடகப் பதிவுகளைக் கையாள்வது குறித்து அதிக தெளிவு தேவை என்று லண்டன் போலீஸ் கமிஷனர் மார்க் ரோவ்லி கூறியுள்ளார்.
லண்டன் பெருநகர காவல்துறை ஒரு அறிக்கையில், “தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஆன்லைன் வன்முறையை தொடர்பான விதிகள் கலாசாரப் போரைக் கண்காணிக்கும் வகையில் அதிகாரிகளுக்கு சாதகமாக இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
“இதன் விளைவாக, குற்றமற்ற வெறுப்பு சம்பவங்களை லண்டன் பெருநகர காவல்துறை இனி விசாரிக்காது,” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார், இந்த நடவடிக்கை அதிகாரிகளுக்கு “தெளிவான வழிகாட்டுதலை” வழங்கும் என்றும், குற்றவியல் விசாரணைகளில் கவனம் செலுத்த அனுமதிக்கும் என்றும் கூறினார்.
செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட லைன்ஹான், தனது சமூக ஊடகப் பதிவுகள் மூலம் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக “மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்” என்று திங்களன்று வழக்கறிஞர்கள் அறிவித்தனர்.