ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை பெரிய விபத்து நடந்தது. துருக்கி நாட்டைச் சேர்ந்த “ஏர் ஆக்ட்” என்ற நிறுவனத்தின் போயிங் 747 சரக்கு விமானம் (எமிரேட்ஸ் ஸ்கைகார்கோவின் EK9788 எனும் விமானம்) ஓடுபாதையை விட்டு விலகி கடலில் விழுந்தது.

விமானம் தரையிறங்கும் போது திடீரென இடதுபுறம் திரும்பி, ஒரு சேவை வாகனத்தில் மோதி கடலில் விழுந்தது. அந்த வாகனத்தில் இருந்த இரண்டு விமான நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விமானத்தில் இருந்த பைலட் உள்ளிட்ட நான்கு ஊழியர்கள் காயமின்றி தப்பினர். விபத்து நடந்தபோது ஓடுபாதை ஈரமாக இருந்தது என்றும், மழையால் இது நடந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த விபத்துக்குப் பிறகு அந்த ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஹாங்காங் சிவில் விமானத் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
ஏர் ஆக்ட் என்பது துருக்கி நாட்டின் சரக்கு விமான நிறுவனம். இது எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு போயிங் 747 விமானங்கள் மூலம் சரக்கு சேவைகளை வழங்குகிறது.