சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்காணிப்பர் என்றும் கூறி உள்ளனர்.

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழகா வெற்றிக் கழகம் (டிவிகே) நடத்திய பேரணியின் போது, செப்டம்பர் 27 அன்று கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியை நீதிமன்றம் நியமித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள், ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல, இந்தக் குழுவில் இடம்பெறலாம். சிபிஐயின் விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை குழுவிடம் சமர்ப்பிப்பார்கள் என்று கூறி உள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்களும் கூறப்படுகிறது. தவெக தரப்பில், இந்த உயிரிழப்பு காரணம், திமுக அரசு என்றும், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்றும், திட்டமிட்டே இந்த கூட்ட நெரிசலை அரங்கேறி 41 பேர் இறப்புக்கு வழிவகுத்துள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபேற்ற விசாரணை, குறிப்பாக நீதிபதி செந்தில் குமாரின் கேள்விகள் மற்றும் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் நீதிமன்றம் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
.இதற்கிடையே கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கப்பட்டது, அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது. இந்த வழக்கின் காரசாரமான விவாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு திங்கட்கிழமை (இன்று) கூறப்படும் என நீதிபதிகள் அறிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு, கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைத்தும் உத்தரவிட்டது.
மேலும், கரூர் துயரம் தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை என்றும் மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாக இதை கருதுவதாகவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பிக்கப்பட்ட பிறகு, மாநில வழக்கறிஞர்களான மூத்த வழக்கறிஞர்கள் டாக்டர் ஏ.எம். சிங்வி மற்றும் பி. வில்சன் ஆகியோர், சிபிஐ விசாரணை கோரும் இரண்டு மனுக்களிலும் மனுதாரர்கள் தங்களுக்குத் தெரியாமல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அவர்கள் இதுகுறித்து உச்சநீதிமன்ற பதிவேட்டிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் பெஞ்சிடம் தெரிவித்தனர். இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக பெஞ்ச் கூறியது.