ஃபெராரி நிறுவனம், பேட்டரி மூலம் இயங்கும் நான்கு இருக்கைகள் கொண்ட கூபே கார்களை 2026 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது.

போர்ஷே, லம்போர்கினி, லோட்டஸ் மற்றும் ரிமாக் ஆகியவை மின்சார கார்களை பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்பத்திய போதிலும் ஃபெராரி நிறுவனம் தற்போது ஹைப்ரிட் வேரியண்ட்டுகளையும் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இத்தாலியில் உள்ள தொழிற்சாலையில் முதலீட்டாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ள அதன் முதல் மின்சார ஸ்போர்ட்ஸ் காரின் விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

1000 குதிரைத்திறனுக்கு அதிகமான திறன் கொண்ட “எலெட்ரிகா” (Elettrica) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நான்கு இருக்கைகள் கொண்ட கூபே கார்கள், 530 கிலோமீட்டர் (329 மைல்கள்) வரம்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 14,000 க்கும் குறைவான கார்களை மட்டுமே விற்றுள்ள ஃபெராரி தனது “இரண்டு கால் பாய்ச்சல்” குதிரை லோகோவுடன் கூடிய எலெட்ரிகாவின் விலை எதையும் வெளியிடவில்லை.

இருந்தபோதும் அதன் Purosangue SUV-வின் அடிப்படை விலையான சுமார் 5 கோடி ரூபாயை ($580,500) ஒப்பிடும் வகையிலேயே எலெட்ரிகாவின் விலை இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.