பாட்னா: பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் மகா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார், விஐபி தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மேலும் ஒரு துணை முதல்வர் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்று காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

243 தொகுதிகளைக்கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உளளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.‘
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி, காங்கிரஸ் ஆர்ஜேடி உள்பட சில கட்சிகளைக்கொண்ட இண்டியா கூட்டணி மற்றும் அரசியல் சாணக்கியரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி (JSP) யும் போட்டியிடுகிறது. இதனால் அங்கு முன்முனை போட்டி நிலவுகிறது.
‘இதற்கிடையில், இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் மோதல் பீகார் சட்டசபை தேர்தலை ஒட்டி, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அடகிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தொகுதிப் பங்கீடு சமீபத்தில் சுமுகமாக முடிந்தது. ஆனால், இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதுபோல எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பயங்கர மோதல் வெடித்து, அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, கூட்டணி குழப்பத்தால் பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இறுதியில், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்வை முதலமைச்சர் வேட்பாளராக இண்டியா கூட்டணி அறிவித்துள்ளது.
பாட்னாவில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் – ஆர்ஜேடி தரப்பில் அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்தனர். மேலும், துணை முதலமைச்சர் வேட்பாளராக வி.ஐ.பி கட்சியின் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பீகாரில், ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி-காங்கிரஸ்-ன் இண்டியா கூட்டணிக்கும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.