பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), “ஜமாத்-உல்-மோமினாத்” என்று பெயரிடப்பட்ட அதன் முதல் மகளிர் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.

‘ஜமாத்-உல்-மோமினாத்’ என்ற மகளிர் படையணியை உருவாக்க ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இந்த பிரிவின் தலைவராக அவரது சகோதரியை நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பயங்கரவாதி என்று ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டுள்ள மௌலானா மசூத் அசார் பெயரில் வெளியிடப்பட்ட கடிதம் மூலம் இது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
கடிதத்தின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட இந்தப் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் அக்டோபர் 8 ஆம் தேதி பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் உஸ்மான்-ஓ-அலி என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.