மும்பை: பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (புதன்கிழமை) இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார், இது ஸ்டார்மரின் முதல் இந்திய அதிகாரப்பூர்வ வருகை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். மும்பையில் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மரை மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றார். சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் வணிகம், கலாச்சாரம் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களுடன் இணைந்தார். இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மருடன் துணைவேந்தர்கள், தொழில் துறையினரும் இந்தியா வந்துள்ளனர்.
கியர் ஸ்டார்மர் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்
இங்கிலாந்து பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிவிட்டுள்ள டிவிட்டில், “இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு அன்பான வரவேற்பு! மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார். இது பிரதமர் ஸ்டார்மரின் முதல் இந்திய வருகை. இந்தப் பயணம் எங்கள் வலுவான மற்றும் துடிப்பான இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.” என தெரிவித்துள்ளார்.