முன்னாள் எகிப்திய சுற்றுலா அமைச்சர் காலித் எல்-இனாமி ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்கா இரண்டாவது முறையாக யுனெஸ்கோவிலிருந்து விலகிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை நிறுவனமான யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரலாக இருந்த பிரான்சின் ஆட்ரி அசோலே சமீபத்தில் தனது நான்கு ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் காங்கோவைச் சேர்ந்த எட்வர்ட் ஃபிர்மின் மாடோகோ (69) மற்றும் காலித் (54) ஆகியோர் போட்டியிட்டனர்.
யுனெஸ்கோ கவுன்சில் 55 வாக்குகளுடன் காலித்தை தேர்ந்தெடுத்தது. அமெரிக்கா வாக்களிக்கவில்லை. காலித்தின் நியமனத்திற்கான உறுப்பினர்களின் ஒப்புதல் செயல்முறை நவம்பர் 6 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.