டெல்லி:  தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் ஓய்வுபெற இன்னும்  ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பணிகளை  மத்தியஅரசு தொடங்கி உள்ளது.   நாட்டின் 53வது   தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்ற நீதிபதி  சூர்யகாந்த் நியமிக்கப்பட உள்ளார்.

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  பி.ஆர்.கவாய் நவ.23ல் ஓய்வு பெறுகிறார்.  இவர் உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாவார். இவரைத் தொடர்நது 53வது   புதிய தலைமை நீதிபதியாக, சீனியாரிட்டியில் முன்னணியில் உள்ள  உச்சநீதிமன்ற நீதிபதி  சூர்யகாந்த்-ஐ நியமிப்பது தொடர்பான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமை நீதிபதி  சூர்ய காந்த் நவம்பர் 24 அன்று  பதவியேற்பார். அவருக்கு 15 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் உள்ளது. இவர், 2027ம்  9ந்தியுடன் ஓய்வு பெறுகிறார்.

அதன்படி, தற்போதைய தலைமைநீதிபதி கவார்,  மூத்த நீதிபதியான சூர்யகாந்த் பெயரை, அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு,  பரிந்துரை செய்வார். இந்த கடிதம் இன்றுக்குள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த கடிதம் கிடைத்ததும், புதிய தலைமை நீதிபதிக்கான அறிவிப்பை மத்தியஅரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும். அதை ஏற்று ஜனாதிபதி அறிவிப்பு வெளியிடுவார்.

வழக்கமான நடைமுறையின்படி தற்போதைய தலைமை நீதிபதி 65 வயதை எட்டும்போது, ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும். அந்த நடைமுறை அடிப்படையில் இப்போது புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதிய தலைமை நீதிபதியை நியமிக்கப்பட உள்ள  நீதிபதி சூர்யகாந்த் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.