சென்னை: பாம நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பாமகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பாமகவில் மருத்துவமனை வளாகத்தில் குவியத்தொடங்கினர்.
இதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நலமுடன் இருப்பதாகவும், முழு உடல் பரிசோதனை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel