சென்னை; தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 14ந்தேதி தொடங்க உள்ள நிலையில், தலைமைச்செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்துறை, அதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக கண்ணாக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார்.
பொதுவாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில், முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கண்களுக்கு படும் வகையில், பல அமைப்புகள், தொழிற் சங்கத்தினர் தங்களது குறைகளை சுட்டிக்காட்டி போஸ்டர் ஒட்டுவது வழக்கமாகும். இதை காணும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதுகுறித்து அவையில் எழுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் தலைமைச்செயலகம் பகுதிகளில் போஸ்டர் ஒட்டுவதை கண்காணிக்க காவல்துறையினருக்கு மாநகர போலீஸ் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்துக் சென்னை மாநகர காவல் துணையர் அருண், காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதவாது,
தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு விதிமுறைகள்
தலைமை செயலகத்திற்குள் நுழையும் அனைத்துப் பொதுமக்களும் கட்டாயச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சட்டப்பேரவை வளாகத்திற்குள் எக்காரணம் கொண்டும் எந்தவிதமான துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்க அனுமதி இல்லை.
தலைமைச் செயலகத்தைச் சுற்றி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்படுதல் கூடாது என்றும் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவல் நிலைய நடைமுறைகள் குறித்த முக்கிய உத்தரவுகள்
காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்தும் கடுமையான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
காவல் ஆய்வாளரின் முன் அனுமதியின்றி எந்த ஒரு சந்தேக நபர்களையும் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கக் கூடாது.
விசாரணையின் போது, கைதிகள் எந்த விதத்திலும் துன்புறுத்தப்படக் கூடாது.
மேலும், விசாரணை கைதிகளைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டும்
இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.