சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது இன்று முற்பகலும் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 2வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுவதுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.