துபாய்: துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கோப்பையை கைப்பறியது இந்திய அணி . மேலும்,இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஹாட்ரி வெற்றியை பதிவு செய்துள்ளது
இதையடுத்து இந்திய அணிக்கு ஆசிய கோப்பையை வழங்க பாகிஸ்தான் அமைச்சர் வந்த நிலையில், அவரிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்த கெத்து காட்டிய இந்திய அணி, வெறும் கையில் வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடினர்.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், வருண் சக்ரவர்த்தி, அக்சர், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
வெற்றி பெற 147 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 5 ரன்களிலும் ஷுப்மன் கில் 12 ரன்களுடனும் வெளியேறினார். இதனால் ஆட்ட கண்ட இந்திய ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்தனர். இந்த அதிர்ச்சி மேலும் தொடர்த்தது, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் ஒரே ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகே ஆட்டம் சூடுபிடித்தது. அதிரடியாக விளையாடிய திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.
இறுதியில் இந்திய அணி 19.5 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 9வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஹாட்ரி வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வி, கோப்பை வழங்க முன்வந்தார். ஆனால், அதை ஏற்க மறுத்ததால், ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது. இதனால் இந்திய வீரர்கள் கோப்பை இன்றி தங்களது மகிழ்ச்சியை ஆரவாரமாக மைதானத்தில் கொண்டாடினர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றபெற்றபோது, கேப்டன் ரோகித் கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி.சி.ஐ. தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, “பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.