கரூர்: தவெக தலைவர் விஜய் கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தோர்எ ண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை காலை கருர் விரைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 குழந்தைகள், 17 பெண்கள், 10 ஆண்கள் என 34 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சமீபத்தில் கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டதாக  தெரிவிக்கப்பட்டது. இதற்கு டஃப் கொடுக்கும் வகையில், தவெக தலைவர் விபஜய் கரூரில் கூட்டத்தை கூட்டும் வகையில், கரூரில் பிரசாரம் செய்ய அனுமதி கோரினார். ஆனால், அவரது பிரசார கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முறையான அனுமதி வழங்க மறுத்து வந்ததுடன், அவருக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்க மறுத்து வந்தது. மேலும், அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது.

அதன்படி, விஜய் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மேலும்  குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் முதியோர்கள் விஜய் பிரசாரக் கூட்டத்திற்கு வர வேண்டாம் என்று கூறிப்பட்டது. இருந்தாலும், விஜயை பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அலை அலையாக வந்து, அவரது பேச்சை கேட்டுச் செல்கின்றனர்.

இநத் நிலையில், இன்று மாலை, கரூரில், விஜய் பிரசாரம் மேற்கொண்டமாக,  லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இதையடுத்து, அங்கு பிரசாரம் மேற்கொண்டு விஜய் சென்றதும், ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி  31 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் மயக்கமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விரைந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். கரூருக்கு அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகள் உடனடியாக செல்ல முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கரூரில் விஜய்யே எதிர்பார்க்காத ‘திக்.. திக்… நிமிடங்கள்’ -பிரசாரத்தில் பெருந்துயரம்! 2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். அதன்படி செப்.13-இல் திருச்சி, அரியலூா், செப்.20-இல் நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். தொடா்ந்து, இன்று நாமக்கல்லிலும் கரூரிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின் உடடினயாக தலைமைச்செயலகம் வந்து தலைமைச்செயலாளர், அமைச்சர் நேரு உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.‘

முன்னதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் தொலைபேசியில் நிலைமையைக் கேட்டறிந்த முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியை செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர்  விரைகிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.