சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 4 ஆண்டு களில் சுமார் 52லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், EPFO வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தகவலின்படி, 2025 பிப்ரவரி மாதத்தில் EPFO-வின் கீழ் நிகர முறையான வேலைவாய்ப்பு உருவாக்கம் நாடு முழுவதும் 4% உயர்ந்து 1.6 மில்லியனாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கடந்த ஜூலை மாதம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தகவல்களின்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூலை 2025 இல் நாடு முழுவதும் சுமார் 9.79 லட்சம் புதிய சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.
சம்பளப் பட்டியல் தரவுகளின் மாநில வாரியான பகுப்பாய்வில், முதல் ஐந்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்த மாதத்தில் நிகர ஊதிய உயர்வைக் கண்டதாகவும், இதன் விளைவாக சுமார் 12.80 லட்சம் ஊழியர்கள் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும், மகாராஷ்டிரா இந்த மாதத்தில் 20.47 சதவீத நிகர ஊதிய அதிகரிப்புடன் முன்னிலை வகித்தது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, டெல்லி, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்த மாதத்தில் மொத்த நிகர ஊதியத்தை 5 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன.
தொழில் வாரியான தரவுகளின் மாதாந்திர ஒப்பீடு, இரும்புத் தாது சுரங்கம், பல்கலைக்கழகங்கள், பீடி உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, மருத்துவமனைகள், வணிக வர்த்தகம் மற்றும் பயண முகமைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் நிகர ஊதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டதாகக் காட்டுகிறது. மொத்த நிகர உறுப்பினர்களில், ஏறத்தாழ 40.21 சதவீதம் சிறப்பு சேவைகளிலிருந்து வந்தது.

மாதாந்திர சம்பளப் பட்டியலில், ஆதார் சரிபார்க்கப்பட்ட யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மூலம் முதல் முறையாக EPFO இல் சேரும் உறுப்பினர்கள், EPFO கவரேஜிலிருந்து வெளியேறிய தற்போதைய உறுப்பினர்கள் மற்றும் வெளியேறி மீண்டும் இணைந்தவர்களைக் கணக்கிடுவதன் மூலம் நிகர மாதாந்திர சம்பளப் பட்டியல் கணக்கிடப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளில், 52 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக இபிஎஃப்ஓ தரவுகள் சொல்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ஒரு வருஷத்திற்கு சராசரியாக 12.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக இபிஎஃப்ஓ தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், இந்தியாவில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% தமிழ்நாட்டில் இருந்து வந்தது என அதன் புள்ளிவிவரங்களில் தெரியவந்து இருப்பதாகவும், இதன்மூலம், கடந்த 4 வருடங்களில் மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் EPFO-வில் பதிவு செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தகவலின்படி, 2025 பிப்ரவரி மாதத்தில் EPFO-வின் கீழ் நிகர முறையான வேலைவாய்ப்பு உருவாக்கம் நாடு முழுவதும் 4% உயர்ந்து 1.6 மில்லியனாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரியில் EPFO-வின் கீழ் நிகர முறையான வேலைவாய்ப்பு உருவாக்கம் 1.6 மில்லியனாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 3.99% அதிகமாகும், இதில் 0.74 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. தற்காலிக சம்பளத் தரவுகளின்படி, பிப்ரவரி மாதத்தில் 0.74 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயம் என்வென்றால், புதிதாக சேர்ந்துள்ளவர்களில், 57.7% பேர் 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது முதல் முறையாக வேலை தேடுபவர்களின் நம்பகத்தன்மையை குறிப்பதுடன், இதில் பெண்களின் பங்கேற்பும் அதிகமாக இருப்பதாக தெரிவித்து உள்ளது.
“இந்த புதிய சந்தாதாரர்களின் சேர்க்கைக்கு வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள், ஊழியர் நலன்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பு மற்றும் EPFOவின் வெற்றிகரமான தொடர்புத் திட்டங்கள் காரணமாக இருக்கலாம்” என்று மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, பிப்ரவரியில் சுமார் 1.3 மில்லியன் நபர்கள் EPFO இல் மீண்டும் இணைந்தனர், இது ஆண்டுக்கு ஆண்டு 11.9% அதிகரிப்பு. இந்த ஊழியர்கள் வேலைகளை மாற்றினர், ஆனால் சேமிப்பை எடுப்பதற்குப் பதிலாக தங்கள் இருக்கும் EPFO கணக்குகளை மாற்றத் தேர்ந்தெடுத்தனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டது.
புதிதாக பணிகளில்சேர்ந்துள்ளவர்களின் பெண்களின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது, நிகர ஊதியச் சேர்க்கை கடந்த 2024 பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது 9.2% வளர்ச்சி என்றும் குறிப்பிட்டள்ளது. பெண் சேர்க்கையில் ஏற்பட்ட வளர்ச்சி, மிகவும் உள்ளடக்கிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பணியாளர்களை நோக்கிய பரந்த மாற்றத்தைக் குறிக்கிறது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியான பகுப்பாய்வு, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் 0.96 மில்லியனைச் சேர்த்துள்ளதாகக் காட்டுகிறது.