சென்னை: திமுக அரசின் திட்டங்கள் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்பதை கண்டு மலைத்து போனேன்  என  முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  செப்டம்பர் 25ந்தேதி அன்று  மாலை கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா  பிரமாண்டமாக  இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்பட திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டு திமுக அரசை வாழ்த்தி பேசினர்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,  நமது அரசின் ஒவ்வொரு திட்டமும் எத்தனை பேரின் வாழ்க்கையை   மாற்றியுள்ளது என நேரில் கண்டு மலைத்துப் போனேன்; கலை, விளையாட்டு எனப் பல துறைகளிலிருந்தும் இன்றைய சாதனையாளர்கள், நாளைய சாதனையாளர்களை வாழ்த்தி, வழிகாட்டிய இந்த நிகழ்ச்சி ‘மேல ஏறி வாறோம்’ எனத் தமிழகத்தின் வெற்றியை அனைவருக்கும் பறைசாற்றியிருக்கிறது என கூறியுள்ளார்.